Wednesday, April 16, 2008

உலக சினிமா 1994-ல் தனது நூற்றாண்டு விழாவினை கொண்டாடி இருந்தது . நல்ல சினிமாவை தமிழகத்தின் கிராமங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டது . நல்ல சினிமாவை அடையாளம் காட்டவும் ,
மக்களுக்கு எடுத்து செல்லவும் ஒரு இயக்கம் தேவைப்பட்டது . இந்த தேவை நிழல் என்னும் அமைப்பு உருவாக காரணமாக இருந்தது .
வழக்கமான மசாலா படங்களில் இருந்து மாறுபட்ட இந்திய மற்றும்
உலக திரைப்படங்கள் பார்வையாளனுக்கு எடுத்து செல்லப்பட்டன . இதன் தொடர் முயற்சியாக திரை விமர்சன பயிற்சிகளும் , குறும்பட மற்றும் ஆவணப்படம் தொடர்பான பயிற்சி பட்டறைகளும் , உலக சினிமா பற்றிய புத்தகங்களும் , நிழல் என்னும் பத்திரிகையும் வெளி வந்து கொண்டிருக்கிறது . நல்ல சினிமாவை அடையாளம் காட்டுவதும் , மாற்று சினிமா ( ஆபாசம், வன்முறை, பார்வையாளனை முட்டாள் என்கிற நோக்கில் வணிக அடிப்படையை மையப்படுத்தாத படைப்புகள் ) எடுக்க முனைகிற படைப்பாளிகளை உருவாக்குவதும் நிழலின் நோக்கங்கள்…

பயணப்படவேண்டிய தூரம் பல தூரம் இருந்தாலும் , நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டிருக்கின்றன நிழலின் கால்கள் ...